பினாங்கில் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது – மாநில காவல்துறை தலைவர்

ஜார்ஜ் டவுன்:

மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக பினாங்கு காவல்துறை உறுதியளித்துள்ளது.

பினாங்கில் கடுமையான குற்றங்கள் எதுவும் அண்மையில் நடக்கவில்லை, ஏனெனில் போலீசார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர், மேலும் பாதுகாப்பு விஷயங்களை கையாள்வதில் தள்ளிப்போடுதல் அல்லது கவனக்குறைவாக செயற்படும்போக்கு இல்லை என்று
மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அமாட் கூறினார்.

பினாங்கில் பாதுகாப்பு நிலைமை குறித்து கருத்து கேட்டபோது, ​​குறிப்பாக மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் இருப்பதாகக் கருதும் போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 3 மாதங்களாக பினாங்கு மாநில காவல்துறை தலைவராக பணியாற்றி வரும் டத்தோ ஹம்சா அமாட் மேலும் கூறுகையில், தான் தேசிய போலீஸ் படையில் (PDRM) 36 ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளையும் பணிகளையும் திறம்படச் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக புக்கிட் அமானின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றிய ஹம்சா கடந்த ஏப்ரல் 22 அன்று பினாங்கு காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here