கார்த்தி நடிக்கும் சர்தார்-2 பட ஷூட்டிங்கின் போது விபரீதம்; சண்டை பயிற்சியாளர் ஒருவர் பலி

சென்னை:

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்-2 பட ஷூட்டிங்கின் போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் -2 படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் ஷூட்டிங் நடந்து வந்தது.

சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை என்ற சண்டை பயிற்சியாளர் தவறி விழுந்தார்.

அப்போது, அவர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், மார்பு பகுதியில் அடிபட்ட அவருக்கு , நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here