கோலாலம்பூர்:
மாச்சாங் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் வான் அமாட் ஃபைசால் வான் அமாட் கமால் இன்று தொடக்கம் ஆறு மாதங்களுக்கு மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மக்களவையில் இருந்து அவரை இடை நீக்கம் செய்வதற்கு 110 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் 63 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
46 உறுப்பினர்கள் மக்களவைக்கு வரவில்லை. 3 பேர் வாக்களிக்கவில்லை என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் அறிவித்தார்.
பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவரான வான் அமாட் ஃபைசால் ஆறு மாதங்களுக்கு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



















