கோலாலம்பூர்:
கணக்கு தணிக்கை அறிக்கை முறைகேடுகள் தொடர்பில் MACC யின் விசாரணைக்கு வழிவிடும் வகையில் HRD Corp அதன் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூட், இடைக்கால விடுமுறையில் செல்வதாக நேற்று அறிவித்தார்.

இன்று முதல் என் விடுமுறை எடுப்பதாகவும், அதேநேரம் HRD Corp ற்கான தனது சிறந்த சேவையை வழங்குவதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.
அவர் இல்லாத நேரத்தில், HRD Corp அமைப்பு வழக்கம் போல் அனைத்து செயல்முறைகளையும் மேற்கொள்ளும் என்றும், சேவைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய செயல்பாடுகள் தொடர்ந்து சீராக இயங்கும் என்றும் அவர் கூறினார்.
“இருப்பினும், HRD Corpக்கான எனது உறுதிப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். இதுவரைகாலமும் நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.























