எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற 226 மாணவர்களுக்கு கெளரவிப்பு செய்த டத்தோ ரமணன்

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 226 எஸ்பிஎம் (SPM) மாணவர்களுக்கு டத்தோ ஆர். ரமணனால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கௌரவிக்கப்பட்டனர். சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு துணை அமைச்சரான டத்தோ ரமணன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) பேங்க் ரக்யாட் அறக்கட்டளையுடன் (YBR) இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி செயல்திறனை மேம்படுத்தவும், மாணவர்களை அதிக வெற்றி பெற ஊக்குவிக்கவும் 100,250 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றார்.

குறிப்பாக சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் YBR வழங்கும் வலுவான மற்றும் அசைக்க முடியாத ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன். இந்த உன்னத செயல் நாடு முழுவதும் பிரதிபலிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் நாடு முழுவதும் கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த முடியும். இது ஒரு வருடாந்திர திட்டமாக மாறுவதை நான் உறுதி செய்வேன் என்று ரமணன் டேவான் மெரந்தி சுங்கை பூலோவில் நடைபெற்ற SPM சிறப்பு உதவி நிகழ்ச்சியின் போது கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒய்பிஆர் தலைவர் டத்தோ பிலிப் பெனடிக்ட் லாசிம்பாங் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் டத்தோ ஜம்ரி சலே ஆகியோர் கலந்து கொண்டனர். விழா இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது, முதல் கட்டம் கடந்த வாரம் கோத்தா டாமன்சாராவிலும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பயா ஜெராஸிலும் நடைபெற்றது. பிலிப் தனது உரையில், ஊக்குவிப்பு விருதுகள் பெறுபவர்களைத் தொடர்ந்து சிறந்து விளங்கவும், சிறந்த முடிவுகளை அடைவதில் அவர்களின் வேகத்தைத் தக்கவைக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Sekolah Menengah Kebangsaan (SMK) பண்டார் சுங்கை பூலோ, SMK புக்கிட் காடிங், SMK புக்கிட் ரஹ்மான் புத்ரா, SMK சௌஜானா உத்தாமா, SMK சுபாங், SMK சுபாங் பெஸ்தாரி, SMK செக்‌ஷன் 10,  கோத்தா டமன்சாரா ஆகிய பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அவர்களில் 106 மாணவர்கள் 7ஏ, 64 பேர் 8ஏ, 47 பேர் 9ஏ, எட்டு பேர் 10ஏ மற்றும் ஒரு மாணவர் 11ஏ  பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here