கோலாலம்பூர், ஜூலை-
சுங்கை குண்டாங், சுங்கை செம்பா ஆற்று நீரில் அறியப்பட்ட துர்வாடைக்கான காரணத்தைக் கண்டறிய சிலாங்கூர் குடி நீர் நடவடிக்கை வாரியமான லுவாஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது,
சிலாங்கூரில் நான்கு குடிநீர் சுத்திகரிப்பு மையங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்குமளவுக்கு மோசமான விளைவை உண்டாக்கிய அந்த துர்வாடை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுசூழல் துறை மற்றும் செலாயாங் நகராண்மைக் கழகமும் இதன் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் லுவாஸ் முகநூல் வாயிலாக தெரிவித்தது.









