சுங்கை பூலோ அருகே கம்போங் குபு காஜாவில் மொத்தம் 11 கடைகள் தீயில் எரிந்து நாசமானது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) காலை 7.14 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
மொத்தம் 11 கடைகள் தீயில் 80% சேதமடைந்துள்ளன. இருப்பினும், சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.








