ஜார்ஜ் டவுன்:
பாலிக் பூலாவ் அருகே உள்ள புக்கிட் கெந்திங்கிலுள்ள தாய்லாந்து உணவகத்தில், நேற்று அதிகாலை 3.15 மணியளவில் வெளிநாட்டு நபர் ஒருவர் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
குறித்த உணவகத்தில் பல வெளிநாட்டு சகாக்களுடன் பாதிக்கப்பட்டவர் தகராறு செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் எட்டு வெளிநாட்டவர்களும் ஒரு மலேசியரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அமாட் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களும் 20 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் நேற்று முதல் 7 நாட்களுக்கு போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.