சிரம்பான்: ஜாலான் லாபு பத்து 8 என்ற இடத்தில் இன்று காலை தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததில் ஒரு பெண் தொழிற்சாலை தொழிலாளி கொல்லப்பட்டத்தோடு மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த எஸ்.செல்வராணி (54) என்ற பெண் சம்பவ இடத்திலே இறந்து விட்டதாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.
ஒரு அறிக்கையில், மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (நடவடிக்கை), அஹ்மட் முகிலிஸ் மொக்தார், காலை 7 மணியளவில் விபத்து நடந்தபோது வேனில் ஐந்து பெண்கள் மற்றும் டிரைவர் உட்பட இரண்டு ஆண்கள் இருந்தனர். பாதிக்கப்பட்ட அனைவருமே துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேல் விசாரணைக்காக வழக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
























