திருமணம் எப்போது தம்பி என அடிக்கடி கேட்டதால் அதை சகித்து கொள்ளமுடியாமல் கோபத்தில் ஒரு முதியவரை அடித்தே கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
தனது 60 வயது பக்கத்து வீட்டுக்காரர் தன்னிடம் திருமணம் குறித்து அடிக்கடி கேள்வி கேட்டு தொந்தரவு செய்தார், என் கோபத்தை என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லை, அதனால்தான் நான் அவரை கொலை செய்துவிட்டேன் என்கிறார் இந்தோனேசியாவின் தென் தபாநுலி, வடக்கு சுமத்ரா பகுதியை சேர்ந்த 45 வயதான பார்லிந்துங்கன் சிரேகர் (Parlindungan Siregar) . அவர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனக்கும் அவருக்கும் இது குறித்து பலமுறை வாக்குவாதங்கள் வந்துள்ளது, என்னிடம் இது குறித்து கேட்காதீர்கள் என பலமுறை நான் எச்சரித்துள்ளேன், ஆனால் அந்த முதியவர் அதை கண்டுகொள்ள வில்லை, அதனால்தான் கொலை செய்து விட்டேன் என சிரேகர் கூறியதைக் கேட்ட போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.