நாடு முழுவதும் டீசல் விலை 50 காசால் குறைந்தது

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் டீசல் விலை லிட்டருக்கு RM3.35 இலிருந்து RM3.30 ஆக ஐந்து சென் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்றும், RON97 லிட்டருக்கு RM3.47 ஆகவும், RON95 லிட்டருக்கு RM2.05 ஆகவும் உள்ளது என்று நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மலேசியாவில், டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆக தொடரும் என்றும், இந்த விலைகள் ஆகஸ்ட் 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சரிவுதான் மேற்கு மலேசியாவில் டீசல் விலை குறைவதற்கு காரணம் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விலை போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலனைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அது உறுதியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here