அமரன் – ஹிந்தி டப்பிங்கில் சாய் பல்லவி

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அமரன்’. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பற்றிய பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தை தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள்.

ராணுவ பின்னணியில் ராணுவ வீரர்களைப் பற்றிய படம் என்பதால் இந்திய அளவில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படத்திற்காக ஹிந்தியில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக மும்பை சென்றுள்ளார் சாய் பல்லவி.

இன்ஸ்டாவில், “பெயர் அமரன், நான் மும்பையில் டப்பிங் செய்து வருகிறேன்,” என ஹிந்தியை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here