கிருஷ்ணன் ராஜு
2024 விவசாயக் கணக்கெடுப்பு என்பது மலேசியாவில் விவசாயத் தொழிலின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகும்.
விவசாய உற்பத்தி, உள்ளீடு செலவுகள், பண்ணை அளவு, நிலப் பயன்பாடு, உரிமை, இயந்திரமயமாக்கல், தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற விவசாய நிலங்களின் அடிப்படைத் தரவுகளை இந்த விவசாயக் கணக்கெடுப்பு வழங்குகிறது.
விவசாயக் கணக்கெடுப்பு ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் உஸிர் மஹிடின், ஜோகூர் மாநிலத் துணை ஆணையர் புவான் மாஸ்ரெஹா யாக்கோப் ஆகியோர் நேரடியாகக் களம் இறங்கி கணக்கெடுப்பு நடவடிக்கைகளைப் பார்வை யிட்டனர்.
நாடு முழுவதும் 35.3 விழுக்காடு கணக்கெடுப்பு நிறைவடைந்த நிலையில் சுமுகமாக நடந்தது என்று மலேசியா தலைமைப் புள்ளியியல் இலாகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
தற்போதைய 2024 விவசாயக் கணக்கெடுப்பு மலேசியப் புள்ளியியல் இலாகாவால் (DOSM) செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் கணக்கெடுப்பு கடந்த ஜூலை 7, 2024 தொடங்கி நாடு முழுவதும் இயங்கத் தொடங்கியதில் இருந்து 34ஆவது நாளை எட்டியுள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் 2024 விவசாயக் கணக்கெடுப்பில் 193,095 குடியிருப்பு இடங்கள் உள்ளடங்கும். விவசாயத்துறையில் ஈடுபட்டிருக்கும் 3,134 வணிக நிறுவனங்களும் அடங்கும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விவசாயக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் விவசாயத் துறையில் 423,195 தொழில்முனைவோர் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக, ஜோகூரில் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள குடியிருப்புகள் (TK), வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக 36.6 விழுக்காடு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நாட்டின் விவசாயத்துறையில் எத்தனை விழுக்காடு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த தகவல் அரசாங்கத்திற்குத் தேவை என்று அவர் இங்குள்ள கம்போங் பாசிர் கூடாங் பாருவில் விவசாய கணக்கெடுப்பை நடத்தும்போது செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மூவார், தங்காக், பத்து பகாட் வரை விவசாயக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்ட அவர்கள் உலு திராம், மாசாய் ஆகிய இடங்களுக்குச் சென்று மதியம் கூலாய் சென்றார் என்றார்.
படித்த தொழில்முனைவோரின் ஈடுபாட்டையும் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் மாற்றியமைக்கப்பட்ட அறிவையும் அடையாளம் காணவும் இதுதேவை என்றார். தேவைப்படும் தகவல் விவசாயத் துறையில் உள்ள உண்மைத் தகவல் என்று எப்போதும் வலியுறுத்தப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அறிக்கையின்படி, ஜோகூர் மாநிலத்தின் விவசாயத் துறையானது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.6 விழுக்காடு பங்களிக்கிறது. கூடுதலாக 17.21 பில்லியன் ரிங்கிட் வருமானம் என்று அவர் கூறினார்.
உதாரணமாக, ஜோகூரில் ஒரு நிறுவனம் முன்பு செம்பனை பயிரிட்டது, ஆனால் இப்போது அது காய்கறிப் பயரீடாக மாற்றப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.
ஓர் ஏக்கர் நிலத்தில் 13 வகையான காய்கறிகளை நடவு செய்வதன் மூலம் செம்பனையை விட ஒன்பது மடங்கு அதிக வருமானம் கிடைத்ததாக வணிகர் சுட்டிக்காட்டினார்.எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் அது பிரச்சினைகளைக் கையாளும் திறன் கொண்டது.பொருட்களின் பற்றாக்குறை, குறிப்பாக உணவு உட்பட பல வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இது பொருட்களின் தேவை, விநியோகத்தைப் பொறுத்தது என்பதால் வாழ்க்கைச் செலவுகளைச் சார்ந்து இருக்கும் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.வணிகத் துறையில் குப்பாங் வளர்ப்பதில் மாசாயில் உள்ள ஓராங் அஸ்லியின் ஒரு குழுவின் முயற்சிகள் குறித்து தமது தரப்பு பெருமிதம் கொள்கிறது என்று முகமட் உஸிர் கூறினார்.
90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அல்லது 300 குடியிருப்பாளர்கள் குப்பாங் விநியோகம் செய்வதை சந்தித்தேன். ஜோகூர் மாநிலம் ஓர் ஆண்டிற்கு இரண்டாயிரம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியுடன் நாட்டில் முதலிடம் வகிக்கிறது .
மூவாரில் 18 ஏக்கர் பரப்பளவில் கால்நடைகள், காய்கறிகளைப் பயிரிட்டு, உள்நாட்டு உணவகங்கள் உட்பட சந்தைகளுக்கு தாங்களே விற்பனை செய்கின்றனர்.இந்தச் சூழ்நிலையில், பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு மற்ற தரப்பினரைச் சார்ந்திருக்காததால் அவர்களின் பொருட்களின் விலை வீழ்ச்சிபெறாமல் நன்கு கையாள முடிகிறது.
விவசாயத்தில் இளைஞர்களின் ஈடுபாட்டைக் காண, தொழில்முனைவோரின் சுயவிவரங்களைத் தயாரிப்பதில் நாங்கள் மதிப்பாய்வு, விவசாயக் கணக் கெடுப்புச் செயல்பாட்டில் உள்ளோம். ஜோகூர் மாநிலத்தில் 2024 விவசாயக் கணக்கெடுப்பில் 193,095 , குடியிருப்புகள் (TK), 3,134 வணிக நிறுவனங்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று உஸிர் தெரிவித்தார்.