ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் 5வது இடம்… ஆனாலும் பதக்கம் வென்ற வீராங்கனை…

பாரிஸ் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில், 5வது இடம் பிடித்த ருமேனியா வீராங்கனை, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தை நாடி, வெண்கலப் பதக்கத்தை பெறுகிறார்.

மகளிருக்கான ஃப்ளோர் எக்ஸர்சைஸ் ஜிம்னாஸ்டிக் இறுதிச் சுற்றில், பிரேசில் வீராங்கனை ரெபேக்கா தங்கமும், அமெரிக்காவின் சிமோனா பைல்ஸ் வெள்ளியும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜோர்டான் சிலிஸ் வெண்கலம் வென்றிருந்தனர்.

இறுதிச் சுற்றில் தனக்கு மதிப்பெண் வழங்குவதில் நடுவர்கள் தவறு செய்துவிட்டதாகக் கூறி, ஐந்தாவது இடம் பிடித்திருந்த ருமேனிய வீராங்கனை அனா பர்போசு , சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். மனுவை விசாரிக்க தீர்ப்பாயம் ருமேனிய வீராங்கனைக்கு கூடுதலாக பூஜ்ஜியம் புள்ளி ஒரு புள்ளி வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து ஐந்தாவது இடத்தில் இருந்த ருமேனிய வீராங்கனை மூன்றாவது இடத்திற்கு முன்னேறுகிறார்.

இதனால் அமெரிக்க வீராங்கனை ஜோர்டான் சிலிஸ் வெண்கலப் பதக்கத்தை இழக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here