16 வயது இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிளில் ஜாலிப் பயணம் பெரும் வேதனையில் முடிந்தது

மோட்டார் சைக்கிளில் ஜாலிப் பயணம் ஒரு 16 வயது இளம் பெண்ணுக்கு பெரும் சோதனையில் முடிந்தது.

லைசென்ஸ் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி போலீசாரிடம் சிக்கிக் கொண்ட அப்பெண், தஞ்சோங் லும்பூரில் இருந்து குவாந்தான் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். வழியில் அவரின் சிலிப்பரும் அறுந்துவிட்டது. நடப்பதற்கு படாதபாடுபட்டார்.

நானும் எனது தோழிகளும் மோட்டார் சைக்கிளில்
பந்தாய் செப்பாட்டிற்கு சென்று கொண்டிருந்த போது போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்று எதிர்பார்க்கவே
இல்லை என்று அப்பெண் குறிப்பிட்டார்.

லைசென்ஸ் வைத்திராதது, பக்கவாட்டில் கண்ணாடி பொறுத்த தவறியது, விதியை மீறி எண் பட்டையை பொறுத்தியிருந்தது என மூன்று அபராத நோட்டீசை அப்பெண் பெற்றார்.

பகாங் சாலைப் போக்குவரத்து அமலாக்க புலன்விசாரணை இலாகா, ஜேபிஜே எனப்படும் சாலைப் போக்குவரத்து இலாகா நடத்திய ஓப்ஸ் சம்சேங் ஜாலானான் சோதனை நடவடிக்கையில் 79 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓஸ்மான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here