கோலாலம்பூர்:
2024, இரண்டாவது காலாண்டில் மலேசிய இந்திய சமுதாயத்தில் பிறப்பு 3.7 விழுக்காடாக வீழ்ச்சிக்கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த விகிதம் 4.4 விழுக்காடாக இருந்தது என்று தேசிய புள்ளி விவர இலாகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் உஸிர் மஹிடின் கூறினார்.
இதே காலக்கட்டத்தில் 51 ஆயிரத்து 759 ஆண் குழந்தைகளும் 48 ஆயிரத்து 973 பெண் குழந்தைகளும் பிறந்தன. இதன்படி ஒவ்வொரு 100 பெண் குழந்தைகள் விகிதத்தில் 106 ஆண் குழந்தைகள் பிறந்திருப்பது பதிவாகி இருக்கிறது.
மலாய் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து 67.4 விழுக்காடாக பதிவாகி இருக்கிறது. 2023 இல் இதே காலக்கட்டத்தில் இவர்களின் பிறப்பு விகிதம் 67.1 விழுக்காடாக இருந்தது.
சீனக் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சற்று குறைந்து 9.7 விழுக்காடாக பதிவாகி இருக்கிறது. 2023 இரண்டாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை 9.9 விழுக்காடாக இருந்தது என்று டத்தோஸ்ரீ உஸிர் தெரிவித்தார்.
இதனிடையே 2024 இரண்டாவது காலாண்டில் மலேசியாவின் மக்கள் தொகை 3 கோடியே 41 லட்சமாகும். உயர்வு 1.9 விழுக்காடு. 2023 இதே காலக்கட்டத்தில் மலேசிய மக்கள் தொகை 3 கோடியே 34 லட்சமாக இருந்தது என்று அவர் சொன்னார்.









