வாடகைக்கு வந்தவரின் அக்கப்போர்; அதிர்ச்சியில் உரிமையாளர்

கோலாலம்பூர்:

வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு வீட்டு உரிமையாளர்கள் படுகிற பாட்டையையும் துன்பத்தையும் வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

வாடகையை வசூலிப்பதும் வீட்டை பாதுகாப்பதிலும் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதிலும் அக்கப்போர் பேர்வழிகளுக்கு வீட்டை வாடகைக்கு தந்துவிட்டு உரிமையாளர் நாளும் நரகத்திற்கு சென்று திரும்ப வேண்டியுள்ளது.

அண்மையில் ஒரு சம்பவம் மலேசியர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

வாடகை தராததால் வீட்டைக் காலி செய்ய சொல்லி இருக்கிறார். அந்த அக்கப்போர் பேர்வழியும் வீட்டைக் காலி செய்தார்.

ஆனால் சும்மா போகவில்லை. வீடு முழுவதும் குப்பைகள். மிஞ்சுப்போன உணவு…குடலைப் பிடுங்கும் நாற்றம்.

வீட்டு உரிமையாளர் வெந்து நொந்து போனார். நரகத்திற்கே சென்று திரும்பினார்.

வீட்டை வாடகைக்கு எடுத்த ஆசாமி நரகத்தில் இருந்து வந்திருப்பாரோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here