வசதி குறைந்த மாணவர்களின் கல்வி நிதியாக ஆண்டிற்கு 1 லட்சம் வழங்கி வருகிறோம்; பெர்மிம் தலைவர்

மலேசிய இந்திய முஸ்லிம் பேரவை (பெர்மிம்) வசதி குறைந்த மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக  நிதியுதவிகளை வழங்கி வருவதாக அதன் தலைவர் அஸ்மான் ஹாஹ்  தெரிவித்தார்.  ஆண்டுதோறும் ஏறக்குறைய 50 முதல் 70 மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் இவ்வாண்டு மாணவர்களுக்கான நிதியுதவியும் அதே வேளை சிறு – குறு வணிகர்களுக்கான கல்வி கடனுதவியும் வழங்கும் நிகழ்ச்சி பெர்மிமின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. கிளந்தான் தொடங்கி நாடளாவிய நிலையில்   22 வசதி குறைந்த மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கிய நிகழ்ச்சியில் மாணவர்களின் திறமை இரண்டு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இது வரை தொழிலதிபர்கள், நல்லுளங்கள் வழங்கிய ஆதரவினால் இந்த உதவிகள் வழங்கி வந்ததாகவும்  இவ்வாண்டு சமூக கடர்பாட்டு பொறுப்புடமை (CSR)  அடிப்படையில் Hong Leong Takaful  என்ற பெரு நிறுவனத்துடன் இணைந்து இந்த கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது என்றார்.  அதே வேளை சிறு – குறு வர்த்தர்கள் 10 பேருக்கு கடனுதவியும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here