கோலாலம்பூர்:
ஹொன்டா சிட்டி கார் மீது மோதிய டொயோட்டா கேம்ரி கார் இரண்டு முறை அந்தர்பல்டி அடித்தது.
கோலாலம்பூர் அவான் பாரு பெசார் ஓய்விடத்திற்கு அருகில் கெசாஸ் எனப்படும் ஷா ஆலம் துரித நெடுஞ்சாலையில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்து.
கார் டேஷ்கேமில் பதிவான இந்த 20 விநாடி காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படுவேகமாக வந்த டொயோட்டா கேம்ரி கார் தடம் புரண்டு அந்தர் பல்டி அடித்தது. இச்சம்பவத்தில் இரண்டு கார்களுமே சேதமுற்றன. வாகனமோட்டிகள் காயமுற்றனரா என்பது தெரியவில்லை.