கோலாலம்பூர்:
பிரேதப் பரிசோதனையின் முடிவுகளைத் தொடர்ந்து, பாடகர் முஹமட் நிட்சா அஃப்ஹாமின் மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.
“இறப்புக்கான சரியான காரணம் இன்னும் ‘ஆய்வக விசாரணை நிலுவையில் உள்ளது’ ஆனால் உடல் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே இவ்வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தி வழக்கு விசாரணைகளை நாம் தொடர்கிறோம்” என்றார்.
இதற்கிடையில், தமது தம்பியை கண்டுபிடிக்க குடும்பத்தினர் மற்றும் போலீசார் விரைவாகச் செயல்பட்டதாக , முஹமட் நிட்சாவின் சகோதரி நூர் அஃபஹானி மொக்தார் கூறினார்.









