வீட்டிற்கு வெளியே ஒரு மங்கில் நீர் வைத்து பறவைகள், விலங்குகள் தாகம் தீர்ப்பீர்

பிரிட்டனில் வெப்ப அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியில் ஒரு தட்டில் நீர் ஊற்றி வைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தாகத்தோடு வரும் பறவைகள், விலங்குகள் தாகம் தீர்த்துக்கொண்டு குளித்து உடல் சூட்டை யும் தணித்துக்கொள்ளும் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

லண்டனில் வெப்ப அளவு அதிகரித்திருக்கிறது. 28 பாகை செல்சியஸாக இருந்த உஷ்ண அளவு தற்போது 34 பாகை செல்சியஸாக அதிகரித்திருக்கின்றது. மழையே இல்லை.

சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பம் தாங்காமல் பறவைகள் சாலைகளிலும் வீட்டுப் பகுதிகளிலும் விழுந்து சாகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதர்கள் போலவே விலங்குகள், பறவைகள், மற்ற உயிரினங்கள் அவதிப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here