பொய்யான கூற்றுக்கு பலியாகியுள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர்:  தான் கம்யூனிஸ்ட் தலைவரின் மகள் என்று இணைய மிரட்டலுடன் பொய்யான கூற்றுக்கு சமீபத்தில் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பலியாகியுள்ளார். நீண்ட காலமாக செயல்படாத பார்ட்டி கொமுனிஸ் மலாயாவின் தலைவர் ரஷீத் மைதீன் எனது தந்தை என்று சமூக ஊடகங்களில் ஒரு நபர் பொய்யாகக் கூறியிருக்கிறார். எனது மறைந்த தந்தை அப்துல் ரஷீத் ஹனாபி, ஜூன் தொடக்கத்தில் காலமான ஒரு பள்ளி ஆசிரியர் என்று பினாங்கின் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சைர்லீனா அப்துல் ரஷித் கூறினார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 17), சியர்லீனா தனது போலீஸ் புகாரில்  மலேசியாவின் அதிகாரப்பூர்வ மதத்தை மாற்றப் போராடுவதாகவும் மற்றும் நாட்டில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்களைத் தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அச்சிடப்பட்ட ஆன்லைன் பதிவுகளை அந்த புகாரில் இணைத்திருந்தார்.

புக்கிட் பெண்டேராவில் உள்ள அவரது தொகுதி சேவை மையத்தின் பலகையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதால் அவர் இரண்டாவது புகாரை பதிவு செய்தார். நாம் அனைவரும் சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பரப்பும் அனைத்தும் உண்மையா என்பதையும் தவறாக வழிநடத்தாமல் இருப்பதையும் உறுதிசெய்யும் பொறுப்பு உள்ளது.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவதூறு கலாச்சாரத்தை நிராகரிப்போம், ஒவ்வொரு கூற்றும் உண்மை மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார். 44 வயதான சியர்லீனா 2013 இல் டிஏபியில் சேர்ந்து கவுன்சிலராக  பொதுமக்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார். 2018 இல், அவர்  ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினரானார். பின்பு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் கீழ் அவர் நிறுத்தப்பட்டு 79% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here