ஜோகூர் :
FA காற்பந்து கோப்பை இறுதி ஆட்டத்தில் JDT எனும் ஜோகூர் டாருல் தக்சிம் கால்பந்து கிளப்பை உற்சாகப்படுத்தும் விதமாக வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் ஆகஸ்டு 24 ஆம் தேதி சனிக்கிழமை சிலாங்கூரை எதிர்த்து களமிறங்கும் ஜோகூர் JDT அணிக்கு ஆதரவு தெரிவித்து உற்தசாகப்படுத்துவதற்கு புக்கிட் ஜாலில் அரங்கத்திற்கு படையெடுக்குமாறு ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, காற்பந்து ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
“ஜோகூர் ரீஜெண்ட் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுடன், இந்த ஞாயிற்றுக்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்க மாநில அரசு முடிவு செய்தது என்று இன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி இங்கு வெளியிடப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறினார்.