கோத்த கினபாலு: திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) காலை கோத்தா மருது, கம்போங் லாங்கனில் உள்ள வாழைப்பண்ணையில்,கார் சறுக்கியதில் ஆடவர் உயிரிழந்தார். 36 வயதான கிரண்ட் சன் போயோ என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், அவரது இருக்கையில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
சபா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையின் மூத்த உதவி தீயணைப்புத் தளபதி முகமட் இஷாக் அம்ரான் கூறுகையில், முகமதினி கானி தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, நள்ளிரவு 1.02 மணிக்கு பேரிடர் அழைப்பைப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவித்தார்.
13 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், வாழை மரங்களுக்கு இடையில் ஒரு கார் கவிழ்ந்திருப்பதை கண்டனர். பாதிக்கப்பட்டவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் அது சறுக்கி, வாழை மரங்களில் மோதி கவிழ்ந்திருக்கிறது என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாங்கள் பாதிக்கப்பட்டவரை காரில் இருந்து வெளியேற்றோம். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. மேலதிக நடவடிக்கைக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என முகமட் இஷாக் தெரிவித்தார்.










