சுபாங் ஜெயா:
ரோசாய்ட் அப்துல் ரஹ்மானின் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
பிரதமர் துறையின் ஊடகம், தொடர்புப் பிரிவின் இயக்குநராக பணியாற்றிய ரோசாய்ட் அப்துல் ரஹ்மான் நேற்று மதியம் சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இருதயக் கோளாறு காரணமாக காலமான ரோசாய்ட் தனது நீண்ட கால சக ஊழியரும் நண்பரும் ஆவார் என்று அன்வார் கூறினார்.
இந்த சோகமான தருணத்தில் உறுதியாக இருக்குமாறு ரோசாய்ட்டின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், இன்று காலை புத்ரா ஹைட்ஸ் மசூதியில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.








