3R தொடர்பில் முஹிடின் யாசினிடம் வாக்குமூலம் பெறுவது ஒத்திவைப்பு -போலீஸ்

கோலாலம்பூர்:

முன்னாள் பேரரசரை சிறுமைப்படுத்தும் விதமாக கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினிடம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று ஆகஸ்டு 20 ஆம் தேதி வாக்குமூலம் பெறுவதாக இருந்தது. ஆனால் அந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முஹிடினின் வழக்கறிஞர் மலேசியாவில் இல்லாத நிலையில், வாக்குமூலம் பதிவு நாளை ஆகஸ்டு 21 ஆம் தேதி புதன்கிழமை மேற்கொள்ளப்படும் என்று ஐஜிபி
டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது 3R (இனம், மதம், அரச குடும்பம்) முன்னாள் பேரரசர் பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை சிறுமைப்படுத்திப் பேசியதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது பகாங் மாநில போலீஸ் 28 புகார்களை பெற்றதை தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here