இரண்டு நாள் உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு தாயகம் திரும்பிய ஆசியான் தலைவர்கள்

சிப்பாங்: செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெற்ற 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய கூட்டங்களின் நிறைவைத் தொடர்ந்து, ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் தாயகம் புறப்படத் தொடங்கியுள்ளனர்.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், லாவோஸ் பிரதமர் சோனெக்ஸே சிபாண்டோன், கம்போடிய பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் தாயகம் திரும்புபவர்களில் அடங்குவர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) உள்ள பூங்கா ராயா வளாகத்தில் அனைத்துத் தலைவர்களுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 7.10 மணிக்கு பேடோங்டார்ன் சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். பிரதமர் துறை (கூட்டாட்சி பிரதேசங்கள்) அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபாவால் வழியனுப்பப்பட்டார்.

பின்னர் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு அமைச்சர் சாங் லி காங், சிங்கப்பூர் பிரதமரை வழி அனுப்பி வைத்தார். அவர் இரவு 8.20 மணிக்கு KLIA முனையம் 1 இலிருந்து வணிக விமானத்தில் தாயகம் திரும்பினார். இதைத் தொடர்ந்து லாவோஸ் தூதுக்குழு புறப்பட்டது, அவர்களை தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் .

கம்போடிய பிரதமர் நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் பிரியாவிடை அளித்த பின்னர் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இரவு 11.30 மணிக்கு புறப்பட உள்ளார், மேலும் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சைத் அவரை வழியனுப்புவார். பிராந்திய ஒத்துழைப்பு மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர் மட்ட ஈடுபாடுகளுக்குப் பிறகு 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு நிறைவடைந்தது.

மலேசியாவின் 2025 ஆசியான் தலைமைத்துவத்தின் கருப்பொருளான “உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை” என்பதன் கீழ் நடைபெற்ற இரண்டு நாள் உச்சிமாநாட்டில் 2ஆவது ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (GCC) உச்சநிலை மாநாடு, தொடக்க ஆசியான்-GCC-சீனா உச்சி மாநாடு, 16ஆவது இந்தோனேசியா-மலேசியா-தாய்லாந்து வளர்ச்சி முக்கோணம் (IMT-GT) உச்சநிலை மாநாடு ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here