கோலாலம்பூர்:
மூளையில் ஏற்பட்டிருக்கும் புற்று நோயை குணப்படுத்திவிடுவேன் என்று ஒரு போமோவின் பேச்சைக் கேட்டு ஏமாந்ததோடு மட்டுமன்றி தன் வீட்டையும் இழந்துவிட்டதாக 62 வயது சே இந்தான் மாட் ஸெய்ன் Che Intan Mat Zain மனம் குமுறினார்.
வைத்திருந்த பணத்தை எல்லாம் போமோவிடம் பெற்ற சகிச்சைக்காக செலவு செய்து விட்டேன். வீட்டின் மாதாந்திர பணத்தை செலுத்தவில்லை. இதனால் வீடும் பறிபோய்விட்டது.
மூளை புற்று குணமடையவில்லை. மாறாக அது தற்போது நான்காவது கட்டத்தை எட்டிவிட்டதை மருத்துவ மனையில் டாக்டர் உறுதி செய்ததும் அதிர்ச்சி அடைந்து உடைந்து போய்விட்டதாக அவர் கண்ணீர் ததும்ப சொன்னார்.
சிஎஸ்எம் எனப்படும் மலேசிய புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் அமைப்பின் தலைவர் ஸுராய்னி கமாலை அலோர்ஸ்டார் மருத்துவ மனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றவர்களை சந்தித்தபோது சே இந்தான் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய கால்கள் மரத்துபோன போது, தான் அசையாமல் இருப்பதற்கு பேய் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டதாக அந்த போமோ சொன்னதையும் அவர் நினைவு கூர்ந்தார்.