பா.ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சுதந்திர தினத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதற்கிடையில் ‘தங்கலான்’ படத்தின் புரமோசன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.