புதுடில்லி:
மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், புதுடில்லியிலுள்ள மலேசிய தூதரகத்தில் மலேசிய புலம்பெயர்ந்தோரை சந்தித்து உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தனது உரையில், நாட்டின் செல்வம் வெளியாட்களால் சுரண்டப்படுவதைத் தடுக்க, டீசல் மானியங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற மக்கள் விரும்பத்தகாத சில முடிவுகளை மலேசிய அரசு எடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
ஆகஸ்ட் 19 முதல் 21 வரை இந்தியாவிற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அன்வர், அங்குள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வில் வரும் நல்லதைப் பாராட்டுமாறு அறிவுறுத்தினார்.









