
கோலாலம்பூர்:
பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் தங்கி இருக்கும், வேலை செய்யும் பார்வையற்றொருக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் தரப்படுகின்றன.
தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பல்வகை சவால்களை எதிர்கொண்டிருக்கும் இவர்கள் மேலும் பல துன்பங்கள் விடாமல் துரத்திக்கொண்டிருக்கின்றன.
கடைகளின் நடைபாதைகள், படிக்கட்டுகளுக்கு கீழே வியாபாரம் செய்வது இவர்களின் நடமாட்டங்களுக்கு
பெரும் இடையூறாகவும் தடங்களாகவும் இருக்கின்றன.
இப்போது ஆகக் கடைசியாக அவர்கள் தொட்டு உணரும் பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஜோர்ஜ் தோமஸ் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸில் 180 பார்வையற்றோர் வாழ்கின்றனர். அதே சமயத்தில் 300 பேர் வேலை செய்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.
நடைபாதையிலும் படிக்கட்டுகளுக்கு அருகிலும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பினும் வியாபாரிகள் இன்னமும் அலட்சியமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றனர்.













