வான் சைபுலின் தனிப்பட்ட கணக்கில் 49,000 ரிங்கிட் வரவு வைக்கப்பட்டதாக சாட்சி தகவல்

இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெர்சத்துவின் முன்னாள் தகவல் பிரிவுத்தலைவர் வான் சைபுல் வான் ஜானின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 49,000 ரிங்கிட் வரவு வைக்கப்பட்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேபேங்க் புக்கிட் டாமன்சாரா உதவிக் கிளை மேலாளர் ஃபசிலா உமர் 49, அக்டோபர் 25, 2022 தேதியிட்ட காசோலை மூலம் வான் சைபுலின் மேபேங்க் இஸ்லாமியக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், 11ஆவது அரசு தரப்பு சாட்சியால் அத்தொகையை வங்கியில் செலுத்திய நபரை அடையாளம் காண முடியவில்லை. 49,000 ரிங்கிட் வரவு வைக்கப்பட்டதை  என்னால் உறுதிப்படுத்த முடியும். ஆனால் யார்  அந்த கணக்கில் பணத்தை வரவு வைக்க சொன்னார்கள் என்பதை என்னால் குறிப்பிட முடியாது. ஏனெனில் இது எனது பொறுப்பில் இல்லை. காசோலையின் விவரங்களை அறிய வேண்டுமானால், தலைமை அலுவலகத்தில் கோரிக்கை வைக்கலாம் என்று துணை அரசு வழக்கறிஞர் சித்தி அமிரா அலி வங்கிக் கணக்கு அறிக்கையை குறிப்பிடும்போது கூறினார்.

49 வயதான வான் சைபுல், பணமோசடி செய்ததாக 18 குற்றச்சாட்டுகளையும், ஜன விபாவா திட்டம் தொடர்பாக இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார். நீதிபதி ரோஸ்லி அகமது முன் விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here