தொடர்புத் துறை அமைச்சராக அம்னோ பிரதிநிதியை நியமனம் செய்வோம்- அக்மால்

கோலாலம்பூர்:

டானி அரசாங்கத்தில் தற்போது தொடர்புத்துறை அமைச்சராக இருக்கும் பிகேஆர் கட்சியின் ஃபாமி ஃபட்ஸிலுக்கு பதிலாக அம்னோ பிரதிநிதி ஒருவர் அப்பதவியில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று அம்னோ தேசிய இளைஞர் அணி தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் சாலே வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் உலக புத்ரா வாணிப மையத்தில் 2024 அம்னோ பொதுப் பேரவையில் வாதங்களுக்கு பதிலளித்து உரையாற்றிய அவர், 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் 16 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ தனித்து போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தார்.

இந்த மண்டபத்தில் இப்போது லைன் இல்லை. இதனால் விவேக கைத்தொலைபேசியில் சமூக ஊடக செயலி இணைப்பைப் பெற முடியவில்லை. அம்னோவை சேர்ந்த ஒருவர் அப்பதவியில் இருந்தால் அனைத்தும் சுலபமாக கிடைத்திருக்கும் என்று டாக்டர் அக்மால் குறிப்பிட்டார்.

இத்தகவலை பிகேஆர் மத்திய மகளிர் தகவல் பிரிவு தலைவி நொராய்னி நோர்டின் சுவாரா கெஅடிலான் ஏட்டில் எழுதியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here