நரேந்திரனின் மரணம் தொடர்பில் மாதவன், நவீன் குமார்,புவனேஸ்வரன் ஆகியோர் மீது கொலை குற்றச்சாட்டு

சுங்கைப்பட்டாணி கார் கழுவும் தொழிலாளியை கொலை செய்ததாக இரு சகோதரர்கள் உட்பட மூன்று பேர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 28 வயதான எஸ்.நரேந்திரனின் மரணத்திற்குகாரணம் என வி.மாதவன் 36, அவரது சகோதரர் வி. நவீன் குமார் 27,ஆர். புவனேஸ்வரன் 31, ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதில்  இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை 2.15 மணி முதல் 2.30 மணி வரை பீடோங் தாமான்  ஜெயாவில் உள்ள கார் கழுவும் கடையின் பின் பாதையில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 28) குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

 காவல்துறை (PDRM) வழக்கு அதிகாரி இன்ஸ்பெக்டர் நுரைன் சஃபினா மின்ஹாட் அரசுத் தரப்பில் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் சார்பிலும் வழக்கறிஞர் பி. வாசுதேவன் ஆஜராகினர். மாஜிஸ்திரேட் கைரத்துல் அனிமா ஜெலானி, செப்டம்பர் 26ஆம்  தேதிக்கு வழக்கு தேதியாக நிர்ணயித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here