EPF சந்தா செலுத்த தவறினர்: 635 முதலாளிகளுக்கு தடை

கோலாலம்பூர்:

EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியச் சந்தா தொகையைச் செலுத்தாத 635 நிறுவன இக்குநர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதற்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையில் அவர்களின் பெயர்கள் மலேசிய குடிநுழைவு இலாகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சட்டவிதிகளுக்கு ஏற்ப சந்தாவை முதலாளி தரப்பினர் முழுவதுமாக செலுத்துவதை கட்டாயமாக்கும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

1991 ஊழியர் சேமநிதி வாரியச் சட்டம் பிரிவு 39 கீழ் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் மொத்தம் 13, 820 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான சந்தாத் தொகையைச் செலுத்தத் தவறின என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஊழியர் சேமநிதி வாரியத்தில் பதிவு செய்துக் கொண்டுள்ள 6 லட்சத்து 85 ஆயிரத்து 399 நிறுவனங்களில் இது 2.02 விழுக்காடாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here