குவந்தான்:
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட 45 மோசடி வழக்குகளை பகாங் காவல்துறை பதிவு செய்துள்ளது.
இதில் RM1.2 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கல்வியாளர்கள் சம்மந்தப்பட்ட வணிகக் குற்றப் புகார்களின் 61 வழக்குகள் மற்றும் RM1.45 மில்லியன் இழப்புடன் ஒப்பிடுகையில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
“இந்த மாநிலத்தில் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகள் குறைவதை இந்தத் தரவுகள் காட்டினாலும், இதுபோன்ற வழக்குகள் குறையவில்லை என்றும் கவலையளிக்கும் அளவில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.







