ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியை பாதுகாப்பற்ற அல்லது பேரிடர் மண்டலமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை – ஐஜிபி

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் திடீரென ஏற்றபட்ட குழியை சுற்றியுள்ள பகுதியை பாதுகாப்பற்ற அல்லது பேரிடர் மண்டலமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று போலீஸ் படைத்தலைவர் ரஸாருதீன் ஹுசைன் கூறுகிறார். ஒரு பகுதியை பாதுகாப்பற்றதாக அறிவிக்க காவல்துறை தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியை பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில்  குழி ஒரு பேரழிவாக வகைப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோலாலம்பூர் மாநகர மண்டபம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியவை தங்கள் கடமைகளை ஒரு பேரழிவு போல விடாமுயற்சியுடன் செய்ததாக அவர் இன்று கிளந்தான் காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த வெள்ளியன்று 8மீ ஆழமுள்ள குழிக்குள் விழுந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமியை தேடும் பணியில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஸாருதீனிடம் கேட்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here