பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள்

பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய சமூக கருத்துக்கள் அடங்கிய திரைப்படங்கள் என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்.

இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் இறுகப்பற்று. விக்ரம் பிர    பு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, சானியா ஐயப்பன், விதார்த், அபர்ணதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. வாழ்க்கை, காதல் வாழ்க்கை, தம்பதிகளின் வாழ்க்கை இவற்றை பற்றி இயக்குநர் அழகாக சொல்லியிருப்பார். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தரமணி. ஐடி பெண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் 2017ல் வெளியான திரைப்படம் அருவி. பள்ளி மாணவிகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவரும் சந்திக்கும் கஷ்டங்களை இப்படத்தின் இயக்குநர் போல்டக பேசியிருப்பார். பெண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடை. இப்படத்தில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பெண்கள் காட்டாயம் பார்க்கவேண்டிய இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

இயக்குநர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பெண்களின் மனதையும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும், குடிக்கும் பெண்கள், பப் செல்லும் பெண்களும் கெட்டவர்கள் அல்ல என்பதையும் இப்படம் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here