மகனே… நீ எங்கே – 6 ஆண்டுகளாக வேதனையில் தந்தை

திரைக்கடல் ஓடி திரவியம் தேடு என்ற பழமொழிகேற்ப பலரின் கனவு வெளிநாட்டிற்கு சென்று பொருள் தேடி பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே. அந்த வகையில்  பழனிச்சாமி பெரியசாமி என்ற இளைஞன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 2016ஆம் ஆண்டு மலேசியா ஜோகூர் மாநிலத்திற்கு வேலைக்காக வந்திருக்கிறார்.  2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை குடும்பத்தாருடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

அதன் பின் மகன் பழனிச்சாமியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வராததால் கவலையுற்ற தந்தை மகன் வேலைக்கு சென்ற இடம், நண்பர்கள் என அனைவரையும் பல முறை அழைத்தும் இது நாள் வரை மகன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். தன் மகன் வேலைக்காக சென்ற நிறுவனத்தை தொடர்புக் கொண்டு கேட்டபோது அவர் அங்கிருந்து சென்று விட்டதாக கூறி விட்டனர். அவரின் நண்பர்கள் சிலரை  அழைத்து கேட்டபோதும் சரியான தகவல்களை பெற முடியவில்லை என்கிறார் பெரியசாமி.

எனக்கு அவன் ஒரே மகன். 6 வருடங்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாமல் நானும் அவனின் அம்மாவும்  மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். தயவு செய்து புகைப்படத்தில் இருக்கும் என் மகனை யாராவது எங்காவது பார்த்திருந்தால் அவர் குறித்த விவரங்களை வழங்குமாறு மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் பெரியசாமி. என் மகன் மீண்டும் எங்களுடன் வந்து இணைவார் என்ற நம்பிக்கை மட்டுமே இன்றளவும் எங்களை காப்பாற்றி வருகிறது. அவர் எங்களுடன் இணைய உங்களின் உதவியை வழங்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். மேல் விவரங்களுக்கு 0091-7305680541 (பெரியசாமி).

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here