பெசூட்:
இங்குள்ள கோத்தா புத்ரா மாரா அறிவியல் கல்லூரியின் (MRSM) நான்கு விடுதி அறைகளில் நேற்று இரவு திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், அதிஷ்டவசமாக பாதிக்கப்பட்ட அனைவரும் விடுதிக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடிந்தது என்றும், பெசூட் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முஹமட் அஸ்ருல் இஸ்ஸாம் சுல்கிஃப்லி கூறினார்.
இரவு 10.44 மணியளவில் குறித்த சம்பவம் குறித்து தமக்கு அழைப்பு வந்தது என்றும், உடனே பெசூட் மற்றும் ஜெர்தே ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களிலிருந்து இயந்திரங்களுடன் 20 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
சம்பவம் நடந்தபோது குறித்த விடுதிக் கட்டிடத்தில் 58 மாணவர்கள் இருந்ததாகவும், சம்பவத்தின் போது அவர்கள் பள்ளிப் பகுதியில் இருந்தனர் என்றும் அவர் சொன்னார்.
“இரண்டு மணி நேரப்போராட்டத்தின் பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.