வாஷிங்டன்:
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன.ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், முதலீடு, வேலைவாய்ப்பு பற்றிய விவரம் வருமாறு:
* சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 100 பேருக்கு வேலை கிடைக்கும்.
* PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையம் அமைகிறது. ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக அமைக்க applied materials நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
* செம்மஞ்சேரியில் மைக்ரோ சிப் நிறுவனம் ரூ.250 கோடியில் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
* மதுரை எல்காட் வடபழஞ்சியில் ரூ.50 கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை இன்பின்க்ஸ் அமைக்கிறது.