மஸ்ஜிட் இந்தியா மண் அமிழ்வு பகுதியில் புதிய தடயங்கள் கிடைக்கவில்லை

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலட்சுமி மண்ணுள் புதைந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேடல், மீட்பு நடவடிக்கைகளில் புதிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அந்தச் சம்பவம் தொடர்பில் நடப்பு விவரங்களைப் பெற செய்தியாளர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் இரவு பகலாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆகக் கடைசியாக நேற்று முன்தினம் மாலையில் சம்பவம் நிகழ்ந்த இடத்தில், பூமிக்கடியில் கண்ணோட்டமிட தொலைநோக்கி கேமரா ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

குப்பைக் கூளங்கள் நிரம்பி ததும்பும் சாக்கடை நீர் வெளியேற்றப் பகுதிகளில் காணப்படும் தடயங்களைத் துல்லியமாகக் கண்டறியும் தன்மைக் கொண்டது அந்த புகைப்படக் கருவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here