கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நேர்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியப் பிரஜை விஜயலட்சுமி மண்ணுள் புதைந்து இன்றோடு ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன.
கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மண்ணுள் அமிழ்ந்துப்போன ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த 48 வயது விஜயலட்சுமியை தேடி மீட்பதற்கான முயற்சிகள் இரவும் பகலும் தொடர்ந்து கொண்டதோன் இருக்கின்றன.
மீட்பு படையினர் இன்னும் தீவிரமாக தேடும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அரச மலேசிய போலீஸ், தீயணைப்பு – மீட்பு இலாகா, கோலாலம்பூர் மாநகர் மன்றம், பொது தற்காப்பு பிரிவு, இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியம் நிறுவனம் ஆகிவற்றைச் சேர்ந்த 115க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பணியாளர்களும் அயராமல் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்