கல்வி ஒன்றே நம் சமுதாயத்தை முன்னேற்றும் என்று நாம் பல காலமாக கூறி வருகிறோம். அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று ஏஎஸ்பி ராஜேந்திரன் கூறினார்.
இன்று கம்போங் காசிப்பிள்ளை ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி பிராத்தனை புஷ்பாஞ்சாலியில் சிறப்பு வருகை புரிந்த ஏஎஸ்பி ராஜேந்திரன் தமதுரையில் தெரிவித்தார்.
மாணவர்களே ஒன்றை மட்டுமே எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பணக்கார சிறுவர்களை தாங்க பல தோள்கள் இருக்கிறோம். ஆனால் ஏழை மாணவர்களுக்கு கல்வி மட்டுமே தோள் கொடுக்கும்.
என்னுடைய 38 வருட அனுபவத்தில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை நாம் பார்த்து வருகிறேன். குறிப்பாக இடைநிலைப்பள்ளிகள், கல்லூரிகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. குறிப்பாக சிறுவயதிலேயே கர்ப்பமாவது நம் சமுதாயம் சீரழிவை நோக்கி செல்வதை குறிக்கிறது.
நீங்கள் பெற்றோர் அல்லது ஆசிரியரின் சொல் கேட்டு நடக்கவில்லை என்றால் கடைசியாக போலீஸ்காரர்களாகிய எங்களின் பேச்சை கேட்க வேண்டியிருக்கும். அதனால் ஆடம்பர விஷயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குமாறு ஏஎஸ்பி ராஜன் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.
ஒரு மாணவர் ஏஎஸ்பி ராஜேந்திரனிடம் நீங்கள் எந்த பதவியில் போலீசில் இணைந்தீர்கள் எனறு கேட்டபோது தான் கான்ஸ்டபிளாக இணைந்ததாகவும் படிபடியாக முன்னேறி தற்போது ஏஎஸ்பியாக பதவி வகிப்பதாகவும், தற்பொழுது வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆவலில் அதற்காக பதிந்திருப்பதாக தெரிவித்தார்.
கம்போங் காசிப்பிள்ளை ஶ்ரீ காளியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு குடம், பால் உள்ளிட்ட தேவையான அனைத்தும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.










