திடீர் குழியில் விழுந்து பலியான இந்தியப் பிரஜையான விஜயலட்சுமியின் குடும்பத்தார் தாயகம் சென்றனர்

கோலாலம்பூர்:  ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஏற்பட்ட திடீர் குழியில் விழுந்து  பலியான விஜயலட்சுமியின் குடும்பத்தினர் நேற்று இரவு இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் கணவரும் மகனும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) வழியாக தாயகம் புறப்பட்டுச் சென்றதாக Dang Wangi மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Sulizme Affendy Sulaiman தெரிவித்தார்.

ஆம், அவர்கள் நேற்றிரவு நாட்டை விட்டு புறப்பட்டனர் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் மகனும் விஜயலட்சுமி விழுந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து  சமய சடங்குகளை  செய்தனர் SAR நடவடிக்கை முழுவதும் பாதிக்கப்பட்டவரின் குடும்பம், குறிப்பாக அவரது மகன், M.சூரியா 25, SAR கூடாரத்தில், மீட்புக் குழுவால் அவரது தாயைத் தேடும் நடவடிக்கை பற்றிய தகவலைப் பெறுவதற்காக வழக்கமாகக் காணப்பட்டார்.

முன்னதாக, குடிவநுழைவுத் துறை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் கணவர், மகன் மற்றும் இரண்டு உறவினர்களின் விசாவை நீட்டித்ததாக பெர்னாமா தெரிவித்தது, அதே நேரத்தில் கோலாலம்பூர் மாநகர மன்றம் (டிபிகேஎல்) தேடுதல் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தேவைகளுக்கு உதவி செய்தது.

சனிக்கிழமையன்று, பிரதமர் துறை அமைச்சர் (மத்திய பிரதேசங்கள்) டாக்டர் ஜலிஹா முஸ்தபா, இந்தியாவில் ஜாலான் மஸ்ஜித் எட்டு மீட்டர் ஆழமான குழியில் விழுந்து காணாமல் போன இந்தியப்பிரஜையான  ஜி. விஜய லட்சுமி 48, SAR தேடும்பணி ஒன்பது நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here