கோலாலம்பூர்:
தேசிய தின அணிவகுப்பில் அரச மலேசிய ஆகாயப்படை ஹெலிகாப்டர் ஏந்தி வந்தது பாலஸ்தீனம் கொடி அல்ல. உண்மையில் அது விமானப் படையின் கொடி என்று தொடர்புத் துறை துணை அமைச்சர் தியா நீ சிங் தெளிவுப்படுத்தினார்.
புத்ராஜெயாவில் ஆகஸ்டு 31 ஆம் தேதி நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக அரச மலேசிய ஆகாயப்படை ஹெலிகாப்டர்கள் மலேசிய கொடியை ஏந்தி வந்தன.
அதில் ஒன்றாக அரச மலேசிய ஆகாயப் படை கொடியும் அடங்கும். ஆனால் அதனை தவறாக சித்தரித்து சில தரப்பினர் அது பாலஸ்தீன கொடி என்று ஒரு தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர்.
அந்த ஹெலிகாப்டர் ஏந்தி வந்தது அரச மலேசிய ஆகாயப்படை கொடிதான் என்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அளித்திருக்கும் பதிலில் நீ சிங் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.