கெடா இந்து சங்கத்திற்கு 10,000 ரிங்கிட் நிதி – ரமணன்

இந்திய சிறு வியாபாரிகளுக்கு கை கொடுக்கிறது தெக்குன் – அன்புமணி

(கு.அன்பரசன்)

சுங்கைபட்டாணி:

தெக்குன் நேஷனலில் சிறு வியாபாரிகள் கடன் பெற்று தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாடுத்துறை துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் டத்தோ அன்பு மணி பாலன் தெரிவித்தார்.

கெடா மாநில ம லேசிய இந்து சங்கத்தின் 46ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழாவை அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்த டத்தோ அன்பு மணி தொடர்ந்து பேசுகையில் டத்தோ ரமணன் சமயம் மேலும் சமுதாயப் பிரச்சினைகளில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். அதற்குரிய தீர்வுகளையும் கண்டு வருகிறார் என்று சொன்னார்.

அதேசமயத்தில் சிறு தொழில் செய்பவர்களும் சிறு வியாபாரிகளும் அடுத்த கட்ட வளர்ச்சியை காண்பதற்கு தெக்குன் மூலம் கடன் உதவிகளை டத்தோ ரமணன் ஏற்பாடு செய்திருக்கிறார். இப்போது மிகப் பெரிய எண்ணிக்கையிலான இந்தியர்கள் பலன் பெற்றிக்கின்றனர்என்று டத்தோ அன்புமணி கூறினார்.

தெக்குன் நேஷனல், பேங்க் ராக்யாட் மூலம் ஏராளமான கடன் உதவிகளை சிறு தொழில் வியாபாரிகளுக்கு அவர் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கல்வி, சமயம், கட்டொழுங்கு ஆகியவற்றை ஆழமாக விதைப்பதற்கு
போதுமான நிகழ்ச்சிகளை மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்று டத்தோ அன்புமணி சொன்னார்.

இதனால் இதில் பங்கு கொள்பவர்களுக்கு சமய நெறிமுறைகளும் சமுதாயம் உணர்வும் கொண்டவர்கள் இருப்பர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கெடா மாநில இந்து சங்க 46ஆம் ஆண்டு திருமுறை ஓதும் போட்டி நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் கூடியிருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் டத்தோ ரமணன் இந்த நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் வழங்கி இருப்பதாக அவர் அறிவித்து அதனை ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here