34 ஆண்டுகளாக தவறாமல் ரத்ததான செய்து வரும் குமார் 20 ஆண்டுகளாக மருத்துவ விடுப்பு எடுத்ததில்லை என்கிறார்

ஜோகூர் பாரு:  ஹோட்டல் துறையில்  20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஏ. குமார் இது வரை அவர் மருத்துவ விடுப்போ அல்லது மருத்துவரை சந்திக்க வேண்டிய  தேவை இருந்ததில்லை என்கிறார். இவ்வளவு சிறந்த பணி பதிவைப் பேணுவதற்கான அவரது ரகசியம்? இரத்த தானம் செய்வதில் தனது உறுதியான அர்ப்பணிப்பு என்கிறார் குமார். அவர் கடந்த 34 ஆண்டுகளாக தவறாமல் ரத்ததானம் செய்து வருகிறார்.

59 வயதான அவரது இரத்த தானப் பயணம் குடும்ப அவசரநிலை காரணமாக அவருக்கு 25 வயதாக இருந்தபோது தொடங்கியது. அந்த நேரத்தில், தனது மறைந்த தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக ரத்தம் ஏற்றப்பட்டது. அவருக்கு உதவுவதற்காக நானும் என் உடன்பிறந்தவர்களும் இரத்த தானம் செய்ய ஒன்றாக சென்றோம் என்று குமார் கூறினார்.

அவரது தாயார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் அந்த அனுபவம் அவருக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, குமார் ஆண்டுதோறும் இரத்த தானம் செய்து வருகிறார். இன்றுவரை 125 முறை ரத்ததானம் செய்திருக்கிறார்.

அவரது அர்ப்பணிப்பை மருத்துவமனை சுல்தானா அமினா (HSA) கெளரவப்படுத்தியிருக்கிறது. A+ இரத்த வகை கொண்ட குமார், பொதுவாக வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை தானம் செய்கிறார். அதன் உயிர்காக்கும் பலன்களுக்கு மேலாக, இரத்த தானம் நன்கொடையாளருக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று குமார் நம்புகிறார்.

இரத்த தானம் செய்வதால் நமது உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். நான் ஹோட்டலில் பணிபுரிந்த ஆண்டுகளில் நான் மருத்துவ விடுப்பினை எடுத்ததில்லை என்று அவர் கூறினார். தான் ஒருபோதும் காய்ச்சல் அல்லது தலைவலியால் பாதிக்கப்பட்டதில்லை என்கிறார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here