மஸ்ஜித் இந்தியா குழி விழுந்த இடத்தில் இருந்து விலகி இருக்குமாறு TikTokers ஐ எச்சரிக்கும் போலீசார்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்டுள்ள குழி விழுந்த இடத்தில் இருந்து விலகி இருக்குமாறு, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் குறிப்பாக டிக்டோக்கைப் பயன்படுத்துபவர்களை காவல்துறை எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 23 அன்று இந்தியாவில் இருந்து வந்த சுற்றுலா பயணியான விஜயலட்சுன்மி ஒருவர் எட்டு மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் விழுந்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பொதுமக்களை அருகில் இருந்து விலக்கி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகர மன்றம் மற்றும் இண்டா வாட்டர் கன்சோர்டியம் போன்ற பல ஏஜென்சிகள் அங்கு வேலை செய்கின்றன. எனவே அவர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். டிக்டோக் வீடியோக்களை உருவாக்க யாரும் அங்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை. இந்தப் பகுதி கண்காணிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள், எனவே உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.

விஜயலட்சுமி 48, காணாமல் போன ஒன்பது நாட்களுக்குப் பிறகு, SAR குழுவின் பாதுகாப்பு  குறித்த கவலைகள் காரணமாக, அவரைத் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை ஆகஸ்ட் 31 அன்று நிறுத்தப்பட்டது. தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here