விருதுகள், பட்டங்கள் அபகரிக்கப்படும்; பேரரசர் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் உயரிய விருதுகள், பட்டங்கள், மத்திய அசாங்கத்தின் விருதுகள் பறிக்கப்படும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கடுமையாக எச்சரித்தார்.

உயரிய விருதுகளைப் பெற்றவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டாலோ நீதிமன்ற தண்டனையைப் பெற்றாலோ அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் எச்சரித்தார்.

விருது வழங்கி கௌரவிக்கப்படுவதற்காக தேர்வு செயப்பட்ட ஒவ்வொருவரும் நேர்மைப் பண்பாளராகவும் ஒழுக்க நீதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் ஆட்சியாளர்களுக்கு விசுவாசம் செலுத்துபவர்களாகவும் லஞ்ச ஊழல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் உயரிய விருதுகளைப் பெற்றவர்கள் நாட்டின் தோற்றத்திற்கு களங்கம் ஏற்படத் தக்க குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற தண்டனைக்கு உட்பட்டுவிட்டார்களெனில் அவர்களின் அனைத்து அரசாங்க விருதுகளும் பறிக்கப்படும்.

எனவே நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அரசாங்கம் சோதனையிட்டு கைதிகளின் பட்டியலில் உயர் விருது பெற்றோர் அடங்கி இருப்பின் அவர்களின் விருதுகள் பறிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

மேலும் மாநில அளவிலான விருது, பட்டங்கள் விவகாரங்களில் தாம் தலையிடப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here